திருமணத்தில் கறி சோறு தகராறு காரணமாக மருமகனை கொலை செய்த தாய்மாமன்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 04:33 pm
uncle-killed-the-son-in-law

மதுரையில் தாய் மாமன் வீட்டு திருமண பந்தியில்  பரிமாறப்பட்ட கறியின் அளவு  குறைவாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட தகராறில், மருகனை தாய்மாமன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வாடிப்பட்டியை அடுத்த சாணம்பட்டி, குரங்குதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 10ம் தேதி அதே பகுதியில் உள்ள தனது தாய்மாமன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அப்போது, வாலிபர் பிரபுவுக்கு பந்தியில் உணவு பரிமாறப்பட்ட போது கறி பரிமாறவில்லை. இதனால் திருமண நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து பிரபு அருகேயுள்ள தண்டவாள பகுதியில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது, பிரபுவின் மாமா கார்த்திக் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக பிரபுவை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close