நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 09:33 am
there-is-a-problem-with-nirmala-devi-being-released-on-bail

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கருப்பசாமி, மற்றும் முருகன் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்மலாதேவிக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில், நிர்மலாதேவி ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜாமீன்தாரார்களாக பொறுப்பேற்று நிர்மலாதேவியை அழைத்து செல்ல உறவினர்கள் யாரும் முன்வரவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நிர்மலாதேவியின் உறவினர்களிடம் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close