எரிசாராயம் விற்பனை செய்த மூன்று பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:24 am
three-people-arrested-for-liquor-sale

கும்பகோணத்தில் எரிசாராயம் மற்றும் புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் எரிசாராயம் மற்றும் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை  செய்யப்படுவதாக காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் என்பவருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்  காவல் துறையினர் கும்பகோணம் பேட்டை தெரு பகுதியில் சோதனை நடத்தினர். 

அப்போது, வேல்முருகன்(35), தமிழ்ச்செல்வன் (45), சுகுமார் (40) ஆகிய மூன்று பேர் மதுபாட்டில்கள் மற்றும் எரிச்சாரயம் பாக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை மடக்கி பிடித்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 60 லிட்டர் எரிசாராயம், 240 புதுச்சேரி மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்புரோஸ் என்பவரின் ஏற்பாட்டில் இதை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அம்புரோஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close