முகிலன் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தையும் விசாரிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:36 am
investigate-vedanta-in-the-mukilan-case

முகிலன் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தையும் சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் காணமல் போனார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அவரை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசை வலியுறுத்தும் விதமாகவும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வரும் 16ஆம் தேதி "முகிலனை தேடி" என்கிற தலைப்பில் முகிலன் மனைவி பூங்கொடி தலைமையில் கரூர் மாவட்டம் சென்னிமலையிலும், மனித உரிமை ஆர்வலர் பாத்திமா தலைமையில் தூத்துக்குடியிலும் நீதிக்கேட்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், "முகிலன் காணாமல் போனது தொடர்பாக அவருடன் நெருக்கமாக உள்ளவர்களை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. அவர்கள் வேதாந்தா நிறுவனத்தையும் விசாரித்து அதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close