கேட்பாரற்று கிடந்த பணப்பை: தவறவிட்டவரிடமே ஒப்படைத்த ஆர்.பி.எஃப்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 11:35 am
rpf-who-handed-over-to-the-missing-bag

தாம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பணப்பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதனை தவறவிட்டவரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பை ஒன்று தனியாக கிடந்தது. இதை கண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதனை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் பணம் மற்றும் அடையாள அட்டைகள் இருந்தன. இதையடுத்து, அந்த அடையாள அட்டையை வைத்து பையை தவறவிட்ட திருச்சியை சேர்ந்த ஜெயராமனை போலீசார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். 

இதனால், மகிழ்ச்சியடைந்த ஜெயராமன் இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அலுவலகத்திற்கு வந்து பணத்தை பெற்று சென்றார். மேலும், போலீசார் கடமையுடன்  சிறப்பாக பணியாற்றுவதை கண்டு நெகிழ்ந்த ஜெயராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close