கோவை: தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 02:48 pm
temple-festival-a-large-number-of-devotees-participating

கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று முடிவடைந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் பொதுமக்கள் உதவியுடன் சீரமைக்கப்பட்டு, கடந்த 5 நாட்களாக யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

முன்னதாக பல்வேறு கோவில்களிலிருந்து  தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு கோவில் கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது. இந்த நன்னீராட்டு பெருவிழாவில், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close