நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் :

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 03:10 pm
sand-sculpture-in-trichy

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, திருச்சி காவிரி ஆற்று மணலில் சிற்பம் ஒன்றை கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் அமைத்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு வருகிற 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த அதே நேரத்தில் 100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும்,  அனைவரும் வாக்களிக்க வேண்டும்,  மேலும் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி  மாவட்டம் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சசிவர்மா 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி  மணல் சிற்பத்தை அமைத்திருந்தார்.  இந்த சிற்பத்தை நாடாளுமன்றம் வடிவில் அமைத்து அதில் எனது ஓட்டு எனது உரிமை என்றும் 100% வாக்களிப்போம் என்பதை ஆங்கிலத்தில் எழுதி நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

மேலும் மூன்று நபர்களைக் கொண்டு ஒரு நாளில் முடிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close