திருச்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை !

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 08:03 am
trichy-3-persons-suicide-in-one-family

திருச்சி மாவட்டம், செந்தண்ணீர்புரம் அருகே உள்ள பாரி தெருவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி, செந்தண்ணீர்புரம் பாரி தெருவைச் சேர்ந்த பாலு (எ) சகாயராஜ் (46), மனைவி யுவராணி (39),  மகள் முத்துலெட்சுமி (25) ஆகியோர் வசித்து வந்தனர்.  மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அங்கிருந்தவர்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்

50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் மூன்று பேரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாகவும், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  

திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்த இவர்கள் தற்போது இந்த வீட்டுக்கு  குடி வந்து ஒரு மாதமே ஆன நிலையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close