மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தல்

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 08:36 am
disabled-persons-should-vote-collector-rohini

சேலத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.  திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் காந்தி ரோட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளியில் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. 

மேலும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தடையின்றி 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கோலம் வரைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close