குடிநீரால் வாந்தி, மயக்கம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் ஓ.எஸ்.மணியன்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:07 am
vomiting-by-drinking-water

கொள்ளிடம் கூட்டு குடிநீர் பருகி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து விசாரித்தார். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் பருகிய 300க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், குடிநீர் பருகியதால் பாதிக்கப்பட்டு வேதாராண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் குடிநீரால் மக்கள் பாதிக்க காரணம் என்ன என்றும், மேற்கொண்டு இந்த குடிநீரால் மக்கள் பாதிக்கமால் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close