குழந்தைகளுக்கு உணவு ஊட்ட சென்ற தாய் மாயம்: கணவர் போலீசில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:27 am
complain-about-the-missing-woman-in-police

கும்பகோணத்தில், பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிட சென்ற பெண் காணாமல் போனதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கும்பகோணம், வட்டி பிள்ளையார் கோவில் கள்ளுக்கடை சந்தையை சேர்ந்தவர் முருகன் (38). இவருக்கு 7 வயதில் ஒரு மகன் மற்றும் 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி முருகனின் மனைவி பிரியா (28) பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வருதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பிரியாவை உறவினர் வீடுகளில் தேடியுள்ளார். ஆறு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததால் முருகன் மனைவி காணாமல் போனது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மேற்கு காவல்துறை ஆய்வாளர் மணிவேல் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close