கச்சத்தீவு திருவிழா:  2450 பக்தர்கள் நாளை பயணம் !

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 01:59 pm
kachatheevu-thiruvizha

நாளை (வெள்ளிக்கிழமை) காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பக்தர்கள் கச்சதீவு திருவிழாவிற்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பக்தர்கள் செல்லும் வகையில் அனைத்து வகையான ஏற்பாடுகளும், மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.  

287ஏக்கர் பகுதியை கொண்டுள்ள கச்சத்தீவு இராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், நெடுந்தீவில் இருந்து 18 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில்  திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் சுமார் 6000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள்  கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்   இந்தாண்டு கச்சத்தீவு திருவிழா மார்ச்  15 மற்றும் 16 (நாளை மற்றும் நாளை மறுதினம்) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இராமேஸ்வரத்தில் இருந்து 65  விசைப்படகுகளில்  2204 பக்தர்களும்,  15 நாட்டுபடகுகளில்  246 பக்தர்களும் என மொத்தம் 2450 பக்தர்கள் செல்லவுள்ளனர் .  

நாளை (வெள்ளிக்கிழமை) காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பக்தர்கள் கச்சதீவு திருவிழாவிற்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பக்தர்கள் செல்லும் வகையில் அனைத்து வகையான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுவருகின்றது. 

பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுபடகில் கச்சத்தீவு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அதன் பின் மதுரை உயர்நீதிமன்றம் கிளை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்  5 ஆண்டுகளுக்கு பின் நாட்டுபடகில்  இந்தாண்டு பக்தர்கள் கச்சத்தீவு செல்வது குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close