சேலம்: இளம் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 08:23 am
salem-awareness-for-young-voters

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். 

மேலும் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி இந்தியா வடிவில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்கு சீட்டு முறையை மாவட்ட ஆட்சியர் ரோஹினி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close