கும்பகோணம்: பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை !

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 08:34 am
45-sovereign-gold-theft-in-kumbakkonam

கும்பகோணம் அருகே  சாக்கோட்டை யில் பூட்டியிருந்த மின்சார வாரிய அலுவலர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ராஜ மீனா நகரைச் சேர்ந்த தொல்காப்பியன், இவரது மனைவி சுகந்தி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று இருந்தனர் . நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டினுள் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 சவரன் நகைகள், மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. 

இதுகுறித்து உடனடியாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து,  இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close