சென்னை: குப்பையில் கிடந்த 60 கிலோ ராமர் சிலை...!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:41 am
60-kg-rama-statue-in-garbage

சென்னை ராயபுரத்தில் குப்பையில் இருந்த 60 கிலோ எடையுள்ள ராமர் சிலையை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது கடத்தல் சிலையா என போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை ராயபுரம் செட்டித் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைகளுக்குள் உலோகத்தால் ஆன ராமர் சிலை ஒன்று கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 60 கிலோ எடை கொண்ட அந்த சிலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் கணேசன் என்பவர் வைத்து விட்டு சென்றதாக தெரியவந்தது.  மேலும் இது கடத்தல் சிலையா? அந்த சிலையை எதற்காக அங்கு கொண்டு வந்து வைத்தனர் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close