கோவை: மருதமலை அருகே காட்டுத் தீ !

  டேவிட்   | Last Modified : 15 Mar, 2019 10:40 am
fire-at-kovai-maruthamalai-forest-area

மருதமலை அருகே உள்ள பட்டா நிலத்தில் இருந்து, வனங்களுக்கு பரவிய காட்டுத் தீயை நள்ளிரவு வரையிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் போராடி அணைத்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம், துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 20க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த மாதத்தில் மட்டும் கோவை மாவட்ட வனப்பகுதியில் 8-வது முறையாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close