பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:13 pm
tiruchi-and-kumbakonam-protest

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் சிபிஐ விசாரணையைத் தவிர்த்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்திட வலியுறுத்தியும், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம் எதிரில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண் வழக்கறிஞர்கள் திரளாக கலந்துக்கொண்டு குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதேபோல், பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திடவும் , பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட வலியுறுத்தியும், கும்பகோணத்திலும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலமுருகன், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர், மூத்த வழக்கறிஞர் கலியமூர்த்தி, கவிதா மோகன் ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close