தமிழகம் முழுவதும்ட, விவசாய நிலங்களில் செயல்படும்வரும் 110 டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகேயுள்ள நிலங்களில் விவசாயம் நடைபெறுவதாகவும், அந்த வழியாகத் தான் மாணவர்கள் சென்றுவருவதாகவும், எனவே அந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்பட்டு வரும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் எத்தனை உள்ளன என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று (வெள்கிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், விவசாய நிலங்களில் செயல்பட்டு வரும் 110 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான அறிக்கையை வருகிற வரும் 18-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.