பழைய இரும்பு குடோனில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:51 am
fire-accident-in-old-iron-godown

கோவையில் பழைய இரும்பு குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தை சேர்ந்த காதர், அபு உல்லா ஆகியோருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோன் அருகே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேபிள்கள்  நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் மளமளவென குடோன் முழுவதும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close