சி.பி.எம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 09:46 am
cpm-candidates-announcement

மக்களவை தேர்தலில் சி.பி.எம் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள சி.பி.எம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு நகிழ்ச்சியில் பங்கேற்ற சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, "மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சி.பி.எம் கட்சி கோவை மற்றும் மதுரையில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார். 

கோவையில் பி.ஆர்.நடராஜனும், மதுரையில் சு.வெங்கடேசனும் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளதாகவும், திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய முழு முயற்சி எடுத்து உழைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close