1008 பித்தளை சொம்புகள் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:56 pm
1008-bronze-mug-confiscated

திருச்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துவரப்பட்ட 1008 பித்தளை சொம்புகள் மற்றும் 500 சங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தில்  தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி - கரூர்  சாலையில் உள்ள குடமுருட்டி சோதனைச்சாவடி அருகில் தேர்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் மோகனா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கோயமுத்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 1008 சிறிய வடிவ பித்தளை சொம்பு மற்றும் 500 சிறிய சங்குகள் இருந்தன. உரிய ஆவணமின்றி கொண்டு வருப்பட்டதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து  கிழக்கு வட்டாட்சியர் சண்முகவேலனிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஸ்ரீரங்கம் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு பரிகாரம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close