நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 04:50 pm
acting-to-reorganize-vulnerable-small-businesses

கோவையில் கடந்த 5 ஆண்டுகளில் நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் தீட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்படும் என உறுதியளித்தார். 

கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தப்படும் எனவும், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இரவு நேர பெங்களூரூ இரயில் வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்  உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைப்பார்கள் என குறிப்பிட்டதோடு, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close