கோவை வந்தடைந்தனர் துணை ராணுவப் படையினர்!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 04:58 pm
paramilitary-forces-who-came-to-coimbatore

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நோக்கில் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டுள்ள  துணை ராணுவ படையினர்  இன்று ரயில் மூலம் கோவை வந்தடைந்தனர். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கென உத்திரபிரதேச  மாநிலம் கோராக்பூரில் இருந்து  துணை ராணுவ படையினர் (இரு கம்பெனி)  168 பேர்  ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர்.

இதில் ஒரு கம்பெனி ராணுவப்படையினர் கோவைக்கும் மற்றொரு கம்பெனி ராணுவப்படையினர் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.  மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கோவை  வருவார்கள் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close