மு.க.அழகிரியை சந்திப்பேன்: சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 04:55 pm
i-will-meet-m-k-azhagiri-cpm-candidate-s-venkatesan

மதுரை தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில் மு.க.அழகிரியை சந்திப்பேன் என  மக்களவத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  சார்பில் வேட்பாளாராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக தெரிவித்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி மக்களின் மிக முக்கிய தேவை என்ன என்பது குறித்து அறிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மதுரை மாநகரில், தொழிற்வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்விசேவை, குடிநீர்  தீர்வு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம் கொண்டு வர நடவடிக்கை, தொழில்வளர்ச்சிக்கான திட்டங்கள்  ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கைவிடப்பட்ட நகரமாக மதுரை உள்ளதாகவும், மதுரைக்கான புதிய ஆற்றலை பெறுவதற்கு புதிய வாக்குறுதிகளை கூறி வாக்குகள் கேட்க உள்ளதாகவும் கூறிய அவர்,  மதுரை தொகுதியின் வாக்காளர் என்ற அடிப்படையில் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தோழமை கட்சியினரையும் சந்திப்பேன் எனவும், மதுரையில் உள்ள 15லட்சம் வாக்காளர்களையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close