தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் !

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 08:12 am
rs-5-lakhs-seized-by-election-flying-squad-in-kovai

கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினர் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரனிடம் ஒப்படைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close