தவழ்ந்து வந்து பட்டத்தை பெற்ற இளைஞர்... மனதை நெகிழடையச் செய்த காட்சி !

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 08:19 am
disabled-youth-received-graduation

மணப்பாறை அருகே கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாற்றுத் திறனாளி தவழ்ந்து வந்து பட்டம்பெற்றது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆலத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் கலந்து கொண்டு 234 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது வெள்ளைச்சாமி என்ற மாணவரின் பெயரை அழைத்தனர். கால்கள் இரண்டும் ஊனமாக இருந்த நிலையில் அவர் தவழ்ந்து வந்து பட்டம் பெற்றார். பட்டத்தை வழங்கிய பின் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். அப்போது மாணவ, மாணவிகள் கைகளை தட்டி ஊக்கப்படுத்தினர். இது பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் இந்த காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close