கும்பகோணம்: பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை !

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 09:14 am
kumbakonam-gold-diamond-and-cash-theft

கும்பகோணம் அருகே பிரசாந்தி நகரில் மருத்துவர் லட்சுமிகாந்தன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், வைரத்தோடு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம் அருகே பிரசாந்தி நகர் முதல் தெருவில்  மருத்துவர்  லட்சுமிகாந்தன் வசித்து வருகிறார். நேற்று (சனிக்கிழமை) காலை இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் வந்து விட்டனர் . மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.   இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது,  அடையாளம் தெரியாத நபர்கள்  பீரோவை உடைத்து, அதிலிருந்த  50 சவரன் நகைகள், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் வைரத்தோடு, ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது.  திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் டிஎஸ்பிக்கள் ராமச்சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். 

இதனிடையே  இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த  3 சவரன் நகை மற்றும் 2000 ரூபாய் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

இவ்விரு சம்பவங்கள் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால், காவல்துறையினர் இரவு பகல் ரோந்தை பலப்படுத்தினால் குற்ற சம்பவங்கள் குறையும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close