கச்சத்தீவில் திருவிழா: தமிழகத்தில் இருந்து 2,229 பக்தர்கள் பங்கேற்பு

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 09:27 am
kachatheevu-festival-2229-participated

கச்சத்தீவில் இந்திய-இலங்கை பக்தர்கள் கொண்டாடும் புனித அந்தோணியார் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்து 2229 பக்தர்கள் பங்கேற்றனர். 

இந்தியா–இலங்கை இரு நாட்டு மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் அந்தோணியார் கச்சத்தீவு ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். 

சோதனைக்கு 64 விசைப்படகுகளி மற்றும் 15நாட்டுபடகுகளில்  1,793 ஆண்கள், பெண்கள் 369, குழந்தைகள் 66 பேர் ஒரு திருநங்எகை என 2,229பயணிகள் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையின் கப்பல், கடலோர காவல் படையின் ஹோவர் கிராஃப்ட் படகுகள் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையின் கப்பல்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

திருவிழாவில் திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர்பவனியும் நடைபெற்றது. இந்த ஆண்டு அதிகளவில் இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்கள் கலந்து கொள்வதால் சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்பட்டது. சிங்கள திருப்பலியினை காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்தினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close