திருநாவுக்கரசுக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:59 am
volunteers-against-thirunavukkarasu

திருச்சியில் தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தொகுதியை பொறுத்தவரை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கல ராஜின் மகன் ஜோசப் லூயிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் முகநூல் பக்கங்கள் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் #GobackThirunavukarssu என திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close