திருச்சியில் மீண்டும் பெண் போலீஸ் தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:55 pm
armed-force-lady-constable-suicide

திருச்சியில் ஆயுதப்படை பெண் காவலர் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் ராஜலட்சுமி (25). இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ராஜலட்சுமியின் வீட்டிற்கு சென்ற சக காவலர்கள் அவர் அரளி விதையை அரைத்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால், ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close