மதுரையில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அண்ணாதுரை!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:00 pm
candidate-annadurai-from-madurai

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை பாராளுமன்ற தொகுதியில் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

டேவிட் அண்ணாதுரை குடும்பத்தின் அரசியல் பின்னணி ஒரு பார்வை.....

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை அவர்கள் வலிமையான வேட்பாளர்...

டேவிட் அண்ணாதுரை அவர்களின் தந்தை மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர் காளிமுத்து.. 

காளிமுத்து மதுரையைச் சேர்ந்தவர். இருப்பினும் அவரது சொந்த ஊர் சிவகாசிக்கு அருகேயுள்ள ராத்தேவன் பட்டி.

*1942-ம் ஆண்டு பிறந்த காளிமுத்து தமிழில் எம்.ஏ.,பி.எச்.டி படித்துள்ளார். இவரது பெற்றோர், காளிமுத்து மற்றும் வெள்ளையம்மாள். 

*சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான காளிமுத்து தமிழின் மீது மாறாத காதல் கொண்டவர். தனது 13வயதிலேயே பேச்சாளராக மாறியவர்....

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாயால் மேடை மணி என்று  பாராட்டப் பெற்றவர்.

*இதுவரை 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தோடு 10க்கும் மேற்பட்ட புத்தகங்களைஎழுதியுள்ளார்.

*1965ம் ஆண்டு இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அப்போது பற்றி எறிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 *அரசியல் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை ஜெயில்களில் அடைக்கப்பட்டார்.

*1971ம் ஆண்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் திமுகவிலிருந்துஎம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுகவில் இணைந்தார்.

*1977 மற்றும் 1980 ஆகிய இரு தேர்தல்களிலும் மதுரை திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.84-ல் அவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 1989-ல் சிவகாசி எம்.பி. தொகுதியில்போட்டியிட்டார்.

*எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்த காளிமுத்துவை, கருணாநிதிக்குப் போட்டியாகஅதிமுகவில் பயன்படுத்திக் கொண்டார்

* கருணாநிதி ஏதாவது அறிக்கை விட்டால் அதற்கு காளிமுத்துவைக் கொண்டுதான் தமிழில் அறிக்கை தயார் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனை திறமைகளைக் கொண்டவர் காளிமுத்து.

*எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காளிமுத்து 1977-ம் ஆண்டு முதல் 87-ம் ஆண்டு வரை அமைச்சர் பொறுப்புவகித்துள்ளார். பல்வேறு துறைகளை அவர் வகித்து வந்தார்.

*எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக சில காலம் திமுகவில் இருந்தார். அதன் பின்னர் திமுக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் ஜெயலலிதாவுடன் சேர்ந்தார்.

* நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அதீத அன்பைப் பெற்ற தலைவர் காளிமுத்து மட்டுமே. 

*நெடுஞ்செழியன் மறைவுக்குப் பிறகு அவைத் தலைவர் பதவி கொடுத்து காளிமுத்துவைக்கெளரவப்படுத்தினார் ஜெயலலிதா.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை தொகுதியில் களம் காணுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close