சேலம்: காவலர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு !

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 01:30 pm
salem-awareness-among-police-officials-for-100-voting

தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி இன்று சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறையினரும் உயர் காவல்துறை அதிகாரிகளும் 100% வாக்களிக்க வலியுறுத்தி சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஏ ஆர் காவல் விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டல் வடிவில் காவலர்கள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் அனைத்து காவலர்களும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இதில் கலந்துகொண்டு உறுதி மொழியை வாசிக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.   பேரணியானது  காந்தி ரோடு அஸ்தம்பட்டி வழியாக மீண்டும் காவல் மைதானத்தை வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close