சினிமா பாணியில் நிகழ்ந்த சாலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 02:53 pm
a-man-is-death-on-road-accident

மணப்பாறை அருகே சாலையில் பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தேனூரைச் சேர்ந்தவர் துரை (வயது 59). இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (30) மாற்றுத்திறனாளி. தந்தை – மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று காலை தேனூரில் இருந்து விராலிமலை நோக்கி மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் அதன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு  பாலத்தின் கீழே உள்ள சர்விஸ் சாலையில் விழுந்தனர். 

இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துரை படுகாயமடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார்  இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close