சென்னையில் 1019 தனி நபர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:35 pm
1019-individual-guns-handed-over-in-chennai-police-station

தேர்தலையொட்டி சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 1019 துப்பாக்கிகள் காவல்துறையிடம், அதன் உரிமையாளர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது, அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு தடை உள்ளது.

இதனால் தேர்தல் நேரங்களில் தனிநபர்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை காவல்துறையிடம் ஒப்படைப்பர். அதன் அடிப்படையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், துப்பாக்கி உரிமம் பெற்ற 1019 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

ஆனால், சென்னையில் மொத்தம் 2700 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1019 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close