கிண்டி இரும்பு குடோனில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் சிரமம்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 05:44 pm
fire-accident-in-godown

சென்னை கிண்டியில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். 

சென்னை கிண்டியில் உள்ள பழைய இரும்பு குடோன் ஒன்றில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மள மளவென பற்றிய தீயால் அப்பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குடோனில் அதிகளவு எண்ணெய் டின்கள் வைக்கப்பட்டிருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  4 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close