அரிவாளை காட்டி பெட்ரோல் நிரப்பியவர்கள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி !

  டேவிட்   | Last Modified : 18 Mar, 2019 08:33 am
petrol-filled-by-showing-sword-cctv-video

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பெட்ரோல் நிரப்பிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகேயுள்ள முட்டியங்கிணறு பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இரவு சுமார் 11.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர் ஊழியரிடம் பெட்ரோல் நிரம்பும்படி கூறியுள்ளனர். பெட்ரோல் நிரம்பிய பின்னர் பணம் கேட்ட ஊழியரை அரிவாள் கொண்டு மிரட்டியபடி இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டனர். 

இதனால் ஊழியர் செய்தறியாவாறு திகைத்து நின்றார். இந்த காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close