காதல் ஜோடிகள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அடைக்கலம் !

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 09:34 am
kumbakonam-married-lovers-requesting-help-from-police

கும்பகோணத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அடைக்கலம் அடைந்தனர். 

கும்பகோணத்தில் சக்கரபாணி கோவில் தெரு லூயிஸ்பேட் மகள்மாகிய மோனிஷா (21) கவராநாயுடு இனத்தை சேர்ந்தவர். இவர் அரசு கலை ஆடவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் வலங்கைமான் தாலுக்கா நரசிங்கமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவரும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மோனிஷாவும் விக்னேஷும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் மோனிஷாவின் வீட்டில்  காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தஞ்சை மாரியம்மன் திருக்கோவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு, கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் அடைக்கலம் கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close