வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, நகைக்காக கொலை!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 12:44 pm
acting-like-a-house-rent-ask-and-killing

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, நகைக்காக மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை அடுத்த செளரிபாளையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின். இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் இரவு நேரத்தில், ஒரு ஆண் , மற்றும் ஒரு பெண் என இருவர் அவரது வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு உள்ளதா என கேட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது, பதிலளித்த மேரி ஏஞ்சலினை திடீரென தாக்கி அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். மேலும், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சிறுது நேரம் கழித்து அவரது வீட்டின் அருகே வந்த அக்கம்பக்கத்தினர் அவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close