சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 09:22 am
22-vacancy-in-the-assembly

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானதையடுத்து சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்.18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோவை சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக சட்டபேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மூன்று தொகுதியான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சியுடன் சேர்த்து சூலூர் தொகுதியும் காலியாகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close