தவறாக எடுத்துச் சென்ற தங்க நகைகளை திருப்பிக் கொடுத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 09:22 am
woman-returns-gold-jewels-to-commissioner-of-police-at-nellai

நெல்லையில், சங்கரவடிவு என்பவர் தவறாக எடுத்துச் சென்ற தங்க நகைகளை காவல் ஆணையரிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். இதனை பாராட்டி நெல்லை மாநகர ஆணையர் அவருக்கு வெகுமதி வழங்கியுள்ளார். 

டவுன் லட்சுமி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் சங்கர வடிவு என்பவரும், சுந்தரத்தம்மாள் என்பவரும் பேருந்திற்காக காத்திருந்தனர். இருவரும் ஒரே மாதிரியான பையை வைத்திருந்தனர். இருவரும் பையை மாற்றி எடுத்துச் சென்றுள்ளனர். சுந்தரம்மாளின் பையில் 22 சவரன் நகை இருந்துள்ளது. சங்கரவடிவு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது பையில் நகை இருந்ததை பார்த்ததும் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். இவரது நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close