துள்ளி குதிக்கும் காளைகளுடன் மண் மணம் மாறாத திருவிழா.. பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ !

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 12:00 pm
temple-festival-in-trichy

மணப்பாறையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் காளைகள் துள்ளி குதித்து எல்லைக்கோட்டை தாண்டியது அனைவரையும் கவர்ந்தது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் பாம்பாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழகம். அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இணைந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற காளைகள் எல்லை தாண்டும் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்திழுத்தது. இதை தொடர்ந்து தேவராட்டமும் நடைபெற்றது.

மண் மணம் மாறாமல் காளைகளுடனும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தும், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி செய்தும் வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close