சித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 09:17 am
water-will-be-opened-in-vaigai-river-at-the-festival-of-chitrai

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, வைகை அணையில் இருந்து 216 அடி தண்ணீர் திறக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெவித்துள்ளார். 

மதுரையில் சித்திரை திருவிழா வரும் 08 ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 15ம்தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக் விஜயமும், 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 18ம்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது,  மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது, இதனையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்னன், மாநகராட்சி ஆனையாளர் விசாகன், மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன், அழகர்கோவில் ஆணையர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் நடராஜன்,

திருவிழா மற்றும் தேர்தல் ஒரே நேரத்தில் வருவதால் இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில். சிறப்பாக நடைபெற அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகையற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து 216 கன அடி தண்ணீர்  திறக்கப்பட உள்ளது. திறக்கப்படும் தண்ணீர் 8 மணி நேரத்திற்கு முன்பாகவே மதுரைக்கு வந்துவிடும் எனத் தெரிவித்தார்.

மேலும் திருவிழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து   மருத்துவத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வரவழைக்கப்பட உள்ளதாகவும், கடந்த ஆண்டை போன்று இந்த வருடமும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்துதரப்படும் என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close