வேட்பு மனு தாக்கல் செய்தார் திருநாவுக்கரசர்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 05:25 pm
thirunavukkarasar-filed-a-nomination

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

திருச்சி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசர் இன்று தேர்தல் அலுவலர் சிவராசுவிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க மாநகர செயலாளர் அன்பழகன், தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நான் சட்டமன்ற உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவை, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளதாகவும், தற்போது திருச்சி மக்களவை தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என கூறிய அவர், திருச்சியில் வெற்றிபெற்றால் தொழில்வாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார்.

இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர். இதுவரை திருச்சி மக்களவை தொகுதியில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close