கோவை: 6 வயது சிறுமி கொலை வழக்கில் 4 பேர் கைது.. போலீசார் அதிரடி !

  முத்து   | Last Modified : 28 Mar, 2019 07:24 am
coimbatore-girl-murdered-4-people-arrested

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த திங்கள் வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், செவ்வாய் அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை  நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இதனிடையே, தங்களது வீட்டின் அருகில் வசித்து வரும் விஜயகுமார், துரைராஜ், சந்தோஷ்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இருப்பினும், 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சந்தோஷ், துரை, சதிஷ், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் இருவர் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதேபோல, இந்த வழக்கில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close