தொண்டர் சிரித்து கொண்டே சென்றால் அவர் அதிமுக கூட்டணி: ராமதாஸ் புது விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 09:07 am
new-description-of-the-ramadoss-coalition

ஒரு தொண்டர் சிரித்து கொண்டே சென்றால் அவர் எங்கள் கூட்டணி என்றும், தலையை தொங்கவிட்டப்படி சென்றால் அவர் திமுக கூட்டணி என்றும், கூட்டணி வரவேற்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் புது விளக்கம் அளித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், அதிமுக தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி, மிகப் பெரிய வெற்றியை பெறும் எனவும், பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற ஆர்வம் காட்டவில்லை எனவும், காங்கிரஸ் 125 இடங்களிலே வருவதே அரிது எனவும் குறிப்பிட்டார். அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " வழியில் வரும் ஒரு தொண்டர் சிரித்துக் கொண்டே சென்றால் அவர் எங்கள் கூட்டணி என்றும் தலையை தொங்கவிட்டபடியே சோகத்துடன் சென்றால் அவர் திமுக கூட்டணி என்றும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close