மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 09:58 am
foreign-money-seized-in-trichy-airport

மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது உடைமைய பரிசோதனை செய்தபோது, சூட்கேஸ்ஸில் மறைத்து எடுத்து வந்த யூரோ, ரிங்கிட், சிங்கப்பூர் டாலர், ரியால், திராம்சும் என ரூ. 6.43 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close