30 அடி தூரம் பறந்து சென்று பாலத்தில் தொங்கிய கேரளா அரசு பேருந்து!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 04:32 pm
kerala-bus-accident-in-kovai

கோவையில் கேரளா அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 

கேரளா மாநிலம் பத்தினன் திட்டாவிலிருந்து அரசு பேருந்து ஒன்று 26 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூரூ புறப்பட்டது. கோவை- சேலம் ஆறு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அதிகாலை 2.20 மணியளவில் கட்டுப்பட்டை இழந்து மங்கலம் சாலை பாலத்தில் மைய தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சுமார் முப்பது அடி தூரம் பறந்து சென்று சாலை நடுவே உள்ள பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த வந்த அவிநாசி தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் அவிநாசி போலீசார் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பலத்த காயமடைந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் ஜெய்சன் மதுபோதையில் பேருந்தை ஒட்டியதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.  அதி பயங்கரமான இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close