காவிரியில் தண்ணீர் கிடைக்க பிரதமர் மோடியை தான் பிடிக்க வேண்டும்: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 06:09 pm
catch-modi-for-water-in-cauvery-thambi-durai

காவிரியில் தண்ணீர் கிடைக்க பிரமர் மோடியை தான் பிடிக்க வேண்டும் என்றும் காங்கிரசை பிடித்தால், விளக்கெண்ணை தடவிய கை நழுவி சென்று விடும் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியதில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், " காவிரி தண்ணீர் விட வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக இருப்பதாகவும், காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கான திட்டம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

நமக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கர்நாடக அரசு தர வேண்டும்.ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆகவே தண்ணீர் கிடைக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தான் பிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு காங்கிரசை பிடித்தால் அது விளக்கெண்ணை தடவிய கை நழுவிக் கொண்டு சென்று விடும் என கூறினார். 

மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் 200 ரூபாய்க்கு மேல் கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக ஏற்கனவே நான் டெல்லியில் பேசி விட்டதாகவும், அவர்களும் தருவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், காவிரி பிரச்சனை, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்ந்திட, பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்திட வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் எனகூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close