மே 23 -க்கு பிறகு முதல்வரின் நிலை தலைகீழாக மாறும் : டிடிவி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 09:20 am
chief-minister-will-come-back-to-sell-sugar-t-t-v-dinakaran

மே 23ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

சேலம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 இடங்களிலும் வெற்றி பெற்று, சுயேச்சைகள் பிரதமரை தீர்மானிக்ககூடிய சூழ்நிலை கட்டாயம் உருவாகும் என தெரிவித்தார்.

மேலும் மே 23 ஆம் தேதிக்கு பிறகு தற்போது மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பழையபடி சந்தையில் சர்க்கரை, வெல்லம் விற்க வந்துவிடுவார். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிப்பதற்கு அவருக்கே 8 சீட்டுகள் தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். 

அனைத்து அதிகாரிகளும் முதலமைச்சருக்கு ஆதரவாக வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்,  இந்த ஆட்சி வீட்டிற்கு செல்லும் பொழுது அனைத்து அதிகாரிகளும் எங்களது மக்களவை உறுப்பினர்களின் வீட்டு வாசலில் காத்திருக்கும் நிலைமை கட்டாயம் வரும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close