எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: சேலத்தில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

  அனிதா   | Last Modified : 02 Apr, 2019 09:39 am
we-will-cancel-the-8-way-road-project-dmk-candidate-campaign-in-salem

எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்போம் என சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூலாவரியில் வீரபாண்டி ராஜா தலைமையில் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர்,  "சேலம் பூலவாரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தன்னை வெற்றி பெற செய்தால் மத்திய அரசிடம் பிரச்னைகளை எடுத்துக்கூறி 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் பாடுபடுவேன்" எனத் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close